உதவிகளை நிறுத்தவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Published By: Rajeeban

10 Nov, 2018 | 03:31 PM
image

ஜனாதிபதி , தனது நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்க உதவிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் என  அமெரிக்காவின் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவராக பதவிவகிக்கவுள்ள எலியட் ஏஞ்சல் எச்சரித்துள்ளார்

இது தொடர்பில் எலியட் ஏஞ்சல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் 

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மூன்று பிரதிநிதிகள் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

உங்கள் நாட்டின் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி  பிரதமரை அரசமைப்பிற்கு முரணான விதத்தில நீக்கிய உங்கள் நடவடிக்கை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள்ஊடாக தீர்வை காணுமாறும்  நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

2015 இல் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமை இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக்கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் குறித்த புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்க செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்கான புதிய சமிக்ஞையை வெளிப்படுத்தின என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளிற்கு பதிலாக அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளில் முதலீடு செய்வதற்கான பல  நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் துரதிஸ்டவசமாக சமீபத்தைய நடவடிக்கைகள்  சரிசெய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் சமீபத்தைய வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தியை நடவடிக்கைகள் இலங்கையில் அரசியல் நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது  சபாநாயகர் கருஜெயசூரிய இரத்தக்களறி அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்சிசி திட்டத்திற்கும் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும்  அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை அமெரிக்க உறவுகள் நல்லாட்சி  ஜனநாயக விழுமியங்களிற்கான அர்ப்பணிப்பு என்ற  பகிரப்பட்ட இலக்குகளில் கட்டியெழுப்ப பட்டுள்ளன.இதன் காரணமாக பாராளுமன்றம் தலையீடுகள் இன்றி தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் இந்த விழுமியங்களிற்கான உங்கள் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41