ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மன்னார் மக்கள் 

Published By: Daya

10 Nov, 2018 | 03:11 PM
image

ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து மன்னாரில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிரிசேனவின் அண்மைக் கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து இன்று காலை 10 மணியலவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் , ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம் , மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து என  பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை எந்தியவாறு  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20