ஐபோன் கையடக்க தொலைபேசிகள்  வெடித்து சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சில முறை பயனாளர்களின்  கவன குறைவினாலும், சில முறை கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் ஐபோன்கள் வெடித்திருக்கின்றது.

வாஷிங்டன் நகரின் பெல்லிங்ஹம் நகரில் இருந்து ஹவாய் நோக்கி பறந்து கொண்டிருந்த அலாஸ்கா ஏர் விமானத்தில் ஐபோன்  6 கையடக்க தொலைபேசி  திடீரென வெடித்து சிதறி தீ பரவியதால் விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்னா கிரெயில் என்பவர் பயன்படுத்திய ஐபோன் கையடக்க தொலைபேசியே வெடித்து தீ பற்றியமை குறிப்பிடத்தக்கது.