பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

10 Nov, 2018 | 02:13 PM
image

முப்படையினரின் பிரதான விளையாட்டுப் போட்டியாகிய 2018 பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பனாகொட இராணுவ குடியிருப்பு மைதானத்தில் நேற்று பிற்பகல் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை முப்படையினர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்றனர். 

10ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியானது, முப்படையினரின் திறமைகளை வெளிகொண்டு வருவதற்கும், அவர்களுக்கிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

 பெட்மின்டன், கரப்பந்து, கிரிகெட், படகு போட்டி, கால்பந்து உள்ளிட்ட 36 வகையான போட்டிகள் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவில் 2500க்கும் மேற்பட்ட முப்படை வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன், இவ்விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை இலங்கை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். 

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விளையாட்டு விழா பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், போட்டியின் வெற்றியாளர்களான இலங்கை இராணுவத்தினருக்கு ஜனாதிபதியினால் வெற்றி கிண்ணம் வழங்கப்பட்டது. 

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் நிறைவுக்கான பிரகடனத்தையும் ஜனாதிபதி இதன்போது வெளியிட்டார். 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கப்பற் படை தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01