இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை

Published By: R. Kalaichelvan

10 Nov, 2018 | 10:53 AM
image

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பாரளுமன்றம் ஜனாதியால் கலைக்கப்பட்டுள்ளது.யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நிரூபிக்க உடனடியாக பாராமன்றத்தை கூட்டுமாறு 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் உலக நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தன.

இலங்கை அரசியல் அமைப்பின் 19ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என்றாலும், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் அமைப்பின் 33 (2) அ பிரிவின் கீழ் பாராளுமன்றத்தை நேற்றிரவு கலைத்துள்துள்ளார்.

இதனால் கொழும்பில் அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் ஜனவரி 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் எனவும் ஜனாதிபதி வெளியிட்டுள் வர்த்மானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் அதிருப்பதிக்குள்ளாகியுள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சி உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததையடுத்தே நாட்டில் அரசியல் ஸ்த்திரமற்ற தன்மை ஏற்பட்டது.

மேலும் ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதா என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றை நாடவுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02