பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது- தேர்தலை எதிர்கொள்வோம்- ஐதே.க

Published By: Rajeeban

10 Nov, 2018 | 08:16 AM
image

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் முடிவு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள  ஐக்கியதேசிய கட்சி எனினும் புதிய தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளது

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நள்ளிரவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கியதேசிய முன்னணியும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக ராஜிததெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து தேர்தல் ஆணையகம்  உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரும் என தகவல்கள் வெளியாகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி முதலில் பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தின் அமர்வுகளை இடைநிறுத்தும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கையை எடுத்தார் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு அவசியமான  எண்ணிக்கை இல்லை என்பது தெரிந்தவுடன் சிறிசேன இரண்டாவது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என ராஜித சேனாரட்ண குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47