மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட காட்டு பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சடலத்தை கண்ட அப் பிரதேச மக்கள் அடம்பன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் கணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.