வெளிநாடுகள்அவர்களது விவகாரங்களில் தலையிட அனுமதிப்பார்களா?- வாசுதேவ  கேள்வி

Published By: R. Kalaichelvan

09 Nov, 2018 | 06:36 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தலையீடு செய்யும் பன்னாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள்,அவர்களது நாட்டில் ஏற்படும் உள்ளக விவகாரங்களில் எமது நாட்டு அதிகாரிகள் தலையீடு செய்வதனை அனுமதிப்பார்களா? தற்போது தலையீடு செய்யும் நாடுகளில் அநேகமானவை கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் பங்களிப்புச் செய்திருக்கின்றன என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பன்னாட்டுப் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகளும், ஏனைய மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளும் உங்களுடனான கலந்துரையாடல்களில் முக்கியம் பெறுகின்றனர். 

பிரதமர் நியமனம் தவறானது எனக் கருத்து வெளியிட்டு வருகின்ற மேற்குறிப்பிட்ட நாடுகளில் சில 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதற்காக உங்களைப் போலவே பல்வேறு வகையிலும் பங்களிப்புச் செய்திருந்தன என்பதே அனைவரும் அறிந்த இரகசியமாக உள்ளது.

தற்போது எமது நாட்டின் விவகாரங்களில் அக்கறை செலுத்தியுள்ள ஏனைய நாடுகளின் பாராளுமன்றங்களில் ஏதேனும் சிக்கல்நிலை தோன்றுமாயின்,அந்நாடுகளில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரிகள் அவ்விடயங்களில் தலையிடுவதற்கு அந்தந்த நாடுகளின் சபாநாயகர்கள் அனுமதிப்பார்களா என்று கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02