சுமார்  150  வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகில் இரண்டு  வால் நட்சத்திரங்கள் பயணிக்கவுள்ளதாக சிரேஷ்ட மருத்துவர் தொழில்நுட்ப ஆய்வுக்கூட விஞ்ஞானியான கீர்த்தி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளைய தினங்களில் P252 மற்றும்  PBA14-2016 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த வால் நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் கி.பி 1770 ல் லேக்ஸஸ் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.