(ப.பன்னீர்செல்வம்)

நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் நாளை மறுதினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் விசேட உரையொன்றை ஆற்றுவார் என பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

நுரைச்சோலைக்கு செலவழித்த பணத்தில் மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை அமைத்திருக்கலாம். இந்த அநியாயத்தை செய்த மஹிந்தவுக்கு நாட்டை ஒப்படைத்தால்  நாட்டையும் அழித்து விடுவாரென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில்

நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது தொடர்பில் தெளிவுபடுத்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாளை மறுதினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது பின்னணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படும். அதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் இணைக்குழு குறுகிய நாள் செயற்றிட்டங்கள் தொடர்பாக தமது அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கும்.

அத்தோடு மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.