14 ம் திகதி பெரும்பான்மையை நிருபிப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும்- வெளிநாட்டு தூதுவர்கள் வேண்டுகோள்

Published By: Rajeeban

09 Nov, 2018 | 12:11 PM
image

இலங்கை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கை வாக்கெடுப்பினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என  ஐரோப்பிய ஓன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பாராளுமன்றம் 14ம் திகதி கூட்டப்படுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை கருத்திலெடுத்துள்ளதாக ஐரோப்பிய  ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் நோர்வே சுவிட்ஸ்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

நாடு தற்போது எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவை காண்பதற்காக பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது வாக்கெடுப்பை நடத்துவதற்கு உடனடியாக அனுமதிப்பதன் மூலம் பாராளுமன்றம் தனது பெரும்பான்மையை நிருபிப்பதற்னு அனுமதிக்கவேண்டும் என தூதுவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் மேலும் தாமதங்கள் ஏற்பட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை பாதிக்கலாம் என தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது  பெரும்பான்மையை நிருபிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாது என்பது குறித்து அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செசன் கவலை வெளியிட்டுள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30