நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஐ.தே.க.வின் எதிர்ப்பு பேரணி ; அலரி மாளிகையிலிருந்தவாறு ரணில் கையசைப்பு

Published By: Vishnu

08 Nov, 2018 | 06:38 PM
image

(இரோஷா வேலு) 

பாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி பாராளுமன்றை கலைப்பதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டுவதோடு, அதற்கு தாம் வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி இன்றைய தினம் எதிர்ப்பு வாகனம் பேரணியொன்றை ஏற்பாடுசெய்திருந்தது.

 

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து இன்றைய தினம் மதியம் இரண்டு மணியளவில் ஆரம்பித்த இவ்வெதிர்ப்பு பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதுடன்  நிறைவுக்கு வந்தது.  

ஐ.தே.க.வின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில்  பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கலந்துகொண்டிருந்தனர். நூற்றுக்காண வாகன அணிவகுப்புடன் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டு கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தை கடந்து அலரி மாளிகையினருகினால் பயணித்தது. 

ரணில் விக்கிரமசிங்க கையசைப்பு

இப்பேரணியானது அலரி மாளிகையினூடாக பயணிக்கையில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையினுள் இருந்தவாறு பேரணிகாரர்களை நோக்கி கையசைத்த வண்ணமிருந்தார். இதனை அவதானித்த பேரணிகாரர்கள் தமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புக்குட்பட்ட தலைவர் அவரே, மக்களின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, தமது தலைவரை காப்பதோடு ஜனாநாயகத்தை நிலை நிறுத்தவே இப்போராட்டம் என கூச்சலிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01