துபாய் நாட்டிற்குச் சொந்தமான விமானம் ரஷ்யாவில் தரையிறங்க முயன்றபோது அது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பலியான பயணிகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.14 இலட்சம் நிதி உதவி செய்வதாக துபாய் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

துபாயில் இருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்ட்வ்–ஆன்டான் நகருக்கு துபாயை சேர்ந்த ஃபிளை துபாய் நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.

அந்த விமானம் ரஷ்யாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், 2 இந்தியர்கள் உட்பட அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.14 இலட்சம் உதவித் தொகை வழங்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.