ஒரு ஓவரில் 43 ஓட்டங்களைக்கொடுத்து மோசமான சாதனை

Published By: Vishnu

08 Nov, 2018 | 11:50 AM
image

நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் சென்டிரல் அணியின் பந்து வீச்சாளர் வில்லெம் லடிக் ஒரே ஓவரில் 43 ஓட்டங்களை அள்ளிக் கொடுத்து மோசாமான சாதனையொன்றை புரிந்துள்ளார்.

நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான போர்ட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. 

நார்தன் அணி சார்பில் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் ஆகியோர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது சென்டிரல் அணியின் பந்து வீச்சாளர் வில்லெம் லடிக் தனது இறுதி ஓவருக்கான பந்துப்பரிமாற்றத்தை மேற்கொண்டார்.

அதன்படி அவரின் ஓவரை எதிர்த்தாடிய ஹாம்ப்டன்  ஓவரின் முதல் பந்தில் 4 ஓட்டத்தை பெற்றார். அடுத்தடுத்து அவர் வீசிய இரண்டு பந்துகளிலும் இரு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். குறித்த இரு பந்துகளும் நோ போல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாவது பந்திலும் ஆறு ஓட்டத்தை விளாசியதுடன் மூன்றாவது பந்தில் ஒரு ஓட்டத்தையும் பெற்றார்.

இறுதி மூன்று பந்துகளையும் எதிர்த்தாடிய ஜோ கார்ட்டர் மூன்று ஆறு ஓட்டங்களை பெற்றார். (4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6 = 43 ). 

இதனால் வில்லெம் லடிக் தான் வீதிய ஓவரில் 43 ஓட்டங்களை அள்ளிக் கொடுத்து‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சிம்பாப்வேயின் அணித் தலைவர் எல்டன் சிகும்புரா ஏழு பந்தில் 4 ஆறு ஓட்டங்களையும் 3 நான்கு ஓட்டங்களையும் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35