ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 5 தேரர்கள் உட்பட இரு பெண்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இவர்கள், இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்றே, இவர்கள் குழப்பநிலையை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.