நீரிழிவு நோயினால் இலங்கையில் 40 இலட்சம் பேர் பாதிப்பு 

Published By: Vishnu

07 Nov, 2018 | 04:28 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கையில் மாத்திரம்  40 இலட்சம் வரையிலானோர் நீரிழிவு நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ள  பேராசிரியர்  சந்சந்திரிக்கா விஜயரட்ண , உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்தல் தொடர்பாக விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையிலான  ஊடகவியளாளர் சந்திப்பின் போதே சந்திரிக்கா பேராசிரியர்விஜயரட்ண  இவ்வாறு தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் நீரிழிவு நோய்த்தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் நீரிழிவு நோயானது பல்வேறுபட்ட நோய்களுக்கு மூலகாரணமாகத்திகழ்வதைக்காணக்கூடியதாகவுள்ளது.அதனடிப்படையில் நோக்கும் போது நீரிழிவு நோயின் காரணமாக கட்டுப்பாடற்ற மற்றும் கண்டறியப்படாத உயர் இரத்த சக்கரை  , பெரும் மற்றும் சிறிய  இரத்த நாளங்களுக்கும்   பாரிய சேதம் ஏற்படுகின்றது. 

இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் மாரடைப்பு ,பக்கவாதம் , சிறுநீரக செயலிழப்பு ,குருட்டுத்தன்மை ஆகியவை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. 

அத்துடன், இலங்கையில் மாத்திரம்  40 லட்சம் வரையிலானோர் நீரிழிவு நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் மத்திய வயதினரைத்தாக்கிய இந்த நோய் தற்போது இளம் வயதினரையும் , வளர்ந்து வரும் இளம் பருவத்தினரையும் அதிக அளவில் பாதிக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் இவ்வாறான நிலைக்கு காரணமாக அமைவது  ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாகும் . ஆரோக்கியமற்ற முறையை எடுத்துக்கொண்டால் எமது நாளாந்த வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடாமை ஆகியவற்;றின் மூலமே இவ்வாறான நிலை தோன்றுகின்றது. 

அவை தவிர , புகையிலைப்பாவனை ,மது பானபாவனை  என்பன ; நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் அமைகின்றன. ஆகவே,  மேற்படி நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரும் முன்வந்து செயற்பட வேண்டும் அத்தடன் குறித்த நோய் தொடர்பில் கவனம் செலுத்தாது அலட்சியம் செய்வதன் ஊடாக பாரிய சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். 

ஆகவே , ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக்கடைப்பிடித்தல் , சுய ஆரோக்கியத்தை பராமரித்தலின் ; மூலம் நீரிழிவு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியதாக அமையும். அந்த வகையில் நவம்பர் 14 ஆம் திகதி உஒலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு  சுகாதார மேம்பாட்டு பணியத்தால் பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02