சமூக வலைதளங்களில் பெண்கள் பகிரும் படங்களை வைத்து, விரும்பிய முகச்சாயலில் பாலியல் பொம்மை வெளியாகலாம்: அதிர்ச்சித் தகவல்

Published By: J.G.Stephan

07 Nov, 2018 | 12:18 PM
image

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெண்களின் முகச்சாயலுடன் வெளியாகும் இந்த பாலியல் பொம்மைகள் சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்றுவருவதுடன், குறித்த பொம்மையுடன் உறவில் ஏற்படும்போது வெளிப்படும் ஒலிகள் பாலியல் பலாத்காரத்தின்போது எழுப்பபடும் ஒலிகளுக்கு ஒத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வந்துள்ளன.

இணையத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பொம்மைகள் சமீப காலமாக சிறுமிகளின் வடிவிலும் விற்கப்படுகின்றன.

பிரித்தானியாவில் இயங்கிவரும் ஒரு பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரான Jade Stanley என்ற  35 வயது பெண்மணி வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து பாலியல் பொம்மைகளை உருவாக்குவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு மொடலாக பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாலியல் பொம்மைகளை வடிவமைத்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right