மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாக  துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மாத்தளை நகரில் இன்று இடம்பெற்றது.

 கடந்த ஆட்சியின் போது மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வு வேலை ஒன்றின் போது மனித எலும்புக் கூடுகள் வெளிவர ஆரம்பித்தன. இவ்வாறு மொத்தம் 126 எலும்புக் கூடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் மீட்கப்பட்டன.  
இந்நிலையில் குறித்த புதைக்குழி தொடர்பாக துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.