கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில்  இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் தெரியவருவதாவது,

தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்  விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.

விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார். மற்றொருவர்  வைத்தியசாலைகுக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.  

இந்த விபத்தில்  இறந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த  செல்வராஜா கஜீபன் வயது 18 என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.

தீபாவளி தினமான இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.