புதிய பிரதமர் மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரீநேசன்  

Published By: Vishnu

06 Nov, 2018 | 05:48 PM
image

நான் கொள்கைக்கும், நீதிக்கும் தலை வணங்குபவன். ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கு தாவமாட்டடேன். கட்சியின் முடிவுக்கு மாறாகவும் நடக்கப்போவதில்லை. கட்சி மாறுவதென்பது செல்வாக்கை விலைபேசி விற்பதற்குச் சமனானது.  நான் மகிந்தவை  சந்திக்க வேண்டிய அவசியமில்லை என மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டின்  அரசியல் நிலவரமானது  ஆள்பிடிக்கும்  படல்ததில் மிக மம்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்ட  முதன்மைப்  பாராளுமன்ற உறுப்பினராக  எனது மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் நீண்டகாலம் கல்விப் பகுதியில் ஆசிரியனாக, விரிவுரையானனாக, பணிப்பாளராக சேவை செய்தவன்.

அரசியலுக்கு  அப்பால் எனக்கென மக்கள் கூட்டமொன்று இருக்கிறது. நான் தேர்தலுக்கு செலவு செய்த பணமோ மற்றையவர்களை விட வெகு குறைவு. அந்தளவுக்க எனக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. அந்த மக்களை நான் உளமார நேசித்து வருகிறேன்.

எனவே பதவி மோகமோ கோடிக்கணக்கான பணமோகமோ ஏற்படமாட்டாது.  இதைவிட எனது பரம்பரைக்கான  செல்வாக்கும் இருக்கிறது. இவைகளைத் தாண்டி நான் ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கு போகமாட்டேன். கட்சி மாறுவதென்பது செல்வாக்கை விலைபேசி விற்பதற்குச் சமனானது.

மகிந்த என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னை வருமாறும் என்னைச் சந்தித்தவர்கள்  கேட்டுக் கொண்டார்கள். திடீரென மகிந்தவுக்கு என்மீது பாசம்  ஏற்பட்டதற்கான காரணம்   எமது மக்களுக்கு  தெரியாமலா போகும். மகிந்த என்னைச் சந்திப்பதற்கு முதல் கட்சித் தலைமையைச் சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்தார் ” அப்போது சம்பந்தனும்  தமிழினத்தின் கோரிக்கையை அவருக்கு  முன்வைத்தார்” இது நாகரிகமானது, வெளிப்படைத் தன்மையானது. இரு வேறு கட்சிகளை  சேர்ந்தவர்கள் நடந்து கொள்ளும் பண்பாடு இப்படித்தான் இருக்கவேண்டும். 

அம்பாறையில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து, முழு மந்திரிப்பதவியும், கோடி கோடியான பணமும் தருவதாக கூறுவது ஒரு அரசியல் நாகரீகமாக தெரியவில்லை. சில வேளைகளில் என்னைச் சந்தித்தவர்களுக்கு அப்படி பேசும்படி கட்டளை பிறப்பிக்கப்படடிருக்லாம். எது எப்படியிருந்தாலும், என்னைப் பொறுத்த வரையில் எனது மக்கள் கூட்டம் எனக்குத் தந்த கௌரவத்தை நான் விலைபேசி விற்கமாட்டேன்.  அப்படி விலைபேசி விற்பது  எனது மக்களுக்க நானே நஞ்சூட்டுவதற்க ஒப்பானது. ஸ்ரீநேசன் ஒருபோதும்  கௌரவத்தை இழக்கமாட்டான் என வந்தவர்களுக்கு தெளிவாக  கூறி  பதிலிறுத்ததாக அவர்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58