மனுஷ நாணயக்காரவைத் தொடர்ந்து மேலும் 15 பேர் எம்மோடு இணைவர் -ஐ.தே.க தெரிவிப்பு 

Published By: Priyatharshan

06 Nov, 2018 | 05:42 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார அப்பதவியிருந்து இராஜினாமா செய்து, மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு எம்மோடு இணைந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளமையானது அரசியலமைப்பினையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்ததுடன், மனுஷ நாணயக்காரவைப் போன்று இன்னும் 15 பேர் வரையில் எம்மோடு இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர் என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய அமைச்சரவையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மனுஷ நாணயக்கார எம்.பி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

தத்தமது கட்சிகளின் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான கட்சித்தாவல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்றையதினம் மனுஷ நாணயக்கார புதிய அரசாங்கத்தில் தான் பெற்றுக் கொண்ட அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59