வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா கீழ்பிரிவு தோட்டத்தில் 9 வயது பாடசாலை மாணவன் ஒருவரை ஒரு வாரத்தின் முன் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதே தோட்டத்தை சேர்ந்த 53 வயது மதிக்கதக்க சந்தேக ஒருவரை இன்று காலை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஏற்கனவே இரு பெண்களை திருமணம் முடித்த குறித்த சந்தேக நபர் அத் தோட்டத்தில் உறவினரான குறித்த மாணவனின் தாய் வெளிநாடு சென்றிருக்கின்ற இந்த நிலையில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த மாணவனை கடந்த வாரம் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.

இவ்விடயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மாணவனை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக குறித்த மாணவன் தனது உறவினர் ஒருவரிடத்தில் நேற்று இரவு சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து, தோட்ட தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இன்று காலை 7 மணியளவில் ஆலய முற்றத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மாணவன் தனக்கு நேர்ந்ததை அம்பலப்படுத்தியுள்ளான். 

இதன்பின்னர், குறித்த சந்தேக நபரை மக்கள் நைப்புடைத்து வட்டவளை பொலிஸாருக்கு அறிவித்த பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)