ஜனா­தி­ப­தி வெளியிட்ட வர்த்­த­மா­னியை சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது - உயர் நீதி­மன்­றுக்கு அறிவித்தார் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல்

Published By: Vishnu

06 Nov, 2018 | 11:15 AM
image

பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை பிற்போடும் வகையில்  ஜனா­தி­பதி பிறப்­பித்த கட்­டளை அடங்­கிய அதி விசேட வர்த்­த­மா­னியை நீதி­மன்றில் சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது என சட்ட மா அதிபர் உயர் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார். 

சட்ட மா அதிபர் சார்பில்  மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் இந்­திகா தேமுனி டி சில்வா  இதனை உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை ஒத்திவைத்து ஜனா­தி­பதி இட்ட கட்­டளை உள்­ள­டங்­கிய அதிவிசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்­யு­மாறு கோரி பொது நல வழக்­கு­களை தொடுக்கும் சட்­டத்­த­ரணி நாகா­நந்த  கொடித்­து­வக்கு உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­துள்ளார். 

சட்­டத்தின் முன்னர் அனை­வரும் சமம், சட்­டத்தின் பாது­காப்பு அனை­வ­ருக்கும் சம­மாக இருக்க வேண்டும் என்ற அர­சி­ய­ல­மைப்பின் 12(1) ஆம் அத்­தி­யாயம் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனால் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்து உத்­த­ர­வி­டு­மாறும் சட்­டத்­த­ரணி நாகா­நந்த கொடித்­து­வக்கு கோரி­யுள்ளார்.

இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு குறித்த அடிப்­படை ஆட்­சே­ப­த்தை பதிவு செய்தே சட்ட மா அதிபர் குறித்த வர்த்­த­மா­னியை சவா­லுக்கு உட்­ப­டுத்த முடி­யாது என சுட்­டிக்­காட்டி, அடிப்­படை உரிமை மீறல் மனுவை தள்­ளு­படி செய்­யு­மாறு கோரினார்.

இந்த  அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று பிர­தம நீதி­ய­ரசர் நளின் பெரேரா தலை­மை­யி­லான சிசிர டி ஆப்றூ மற்றும் விஜித் மலல்­கொட ஆகிய   நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய மூவர் கொண்ட நீதி­யர­சர்கள் குழாம் முன் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது பொறுப்புக்கூறத்­தக்க தரப்­பாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த ஐ.தே.க. தலைவர் ரணில் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலியமுன மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

மற்­றொரு பொறுப்புக்கூறத்தக்க தரப்­பாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த சட்ட மா அதிபர் சார்பில்  நேற்று மன்றில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல்  இந்­திகா தேமுனி டி சில்வா, பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் நரின் புள்ளே ஆகியோர் பிர­சன்­ன­மாகியி­ருந்­தனர்.

இதன்­போதே அடிப்­படை உரிமை மீறல் மனு குறித்த அடிப்­படை ஆட்­சே­ப­த்தை முன்­வைத்த மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் இந்­திகா தேமுனி டி சில்வா, ஜனா­தி­ப­தியின் கட்­ட­ளை­களை சவா­லுக்கு உட்­ப­டுத்த முடி­யாது என்­பதை சுட்­டிக்­காட்டி, பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சுட்டிக்காட்டினார். அதனால் அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்யவும் கோரியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59