கண்டி தெரிபெஹெ பிரதேசத்தில் 66 வயதுடைய முதியவர் ஒருவர்  11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டில் தனியாக இருந்த போது ,  மூன்று சந்தர்பங்களில் குறித்த சிறுமியை  துஷ்பிரயோகத்திற்கு செய்துள்ளார்.

குறித்த சிறுமியை கடந்த 17ம் திகதி  இறுதியாக பாலியல் பலாத்காரம் செய்தபின் பக்கது வீட்டு நபர் தொடர்பாக குறித்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.