கோலியின் சாதனை பாபர் அசாமினால் முறியடிப்பு !

Published By: Vishnu

05 Nov, 2018 | 02:53 PM
image

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் சாதனையொன்றை பாகிஸ்தானின் இளம் வீரரான பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய இருபதுக்கு - 20 போட்டியின்போது 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாபர் ஆசம் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதியுடான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி டுபாயில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப வீரராக களமிறங்கிய பாபர் ஆசம் 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 79 ஓட்டங்களைக்  குவித்தார்.

இந்நிலையில் பாபர் அசாம் 48 ஆவது ஓட்டத்தை தாண்டும் போது இருபதுக்கு - 20 போட்டியில் 26 இன்னிங்சில் ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்தார்.

இதன்மூலம் இருபதுக்கு - 20 போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 27 இன்னிங்சில் ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது பாகிஸ்தானின் பாபர் அசாம்  முறியடித்துள்ளார்.

 பாபர் அசாம் 26 போட்டியில் 26 இன்னிங்சிலும் துடுப்பெடுத்தாடி 1031 ஓட்டங்களைப்பெற்றுள்ளார். இவரது சராசரி 54.26 ஆகும். 8 முறை அரைசதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோலி, பாபர் அஸாம், சாதனை, முறியடிப்புகோலியின் சாதனை பாபர் அசாமினால் முறியடிப்பு !

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் சாதனையொன்றை பாகிஸ்தானின் இளம் வீரரான பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய இருபதுக்கு - 20 போட்டியின்போது 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாபர் ஆசம் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதியுடான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி டுபாயில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப வீரராக களமிறங்கிய பாபர் ஆசம் 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 79 ஓட்டங்களைக்  குவித்தார்.

இந்நிலையில் பாபர் அசாம் 48 ஆவது ஓட்டத்தை தாண்டும் போது இருபதுக்கு - 20 போட்டியில் 26 இன்னிங்சில் ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்தார்.

இதன்மூலம் இருபதுக்கு - 20 போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 27 இன்னிங்சில் ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது பாகிஸ்தானின் பாபர் அசாம்  முறியடித்துள்ளார்.

பாபர் அசாம் இது‍வரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 26 இன்னிங்சிலும் துடுப்பெடுத்தாடி 1031 ஓட்டங்களைப்பெற்றுள்ளார். இவரது சராசரி 54.26 ஆகும். 8 முறை அரைசதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21