மே.தீவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா

Published By: Vishnu

04 Nov, 2018 | 10:31 PM
image

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய முதலில் துடுப்பெடுத்தாடுமாறு மேற்கிந்திய அணியை பணித்தது, இதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மேற்கிந்திய அணி சார்பில் அலீன் 27 ஓட்டத்தை அதிகபடியாக பெற்றுக் கொண்டார்.

110 என்ற இலகுவான வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு மேற்கிந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

அதற்கிணங்க மேற்கிந்திய அணியும் 50 ஓட்டங்களை பெறுவதற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. 

அணித் தலைவர் ரேகித் சர்மா 6 ஓட்டத்துடன் உஷ்மன் தோமஸின் பந்து வீச்சுலும், தவான் 3 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த், ஒரு ஓட்டத்துடனும், ராகுல் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 7.3 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டத்தை பெற்று தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்காக தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டி ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட இந்திய அணி 8.5 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடந்ததுடன் 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மனிஷ் பாண்டிய 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கே. பாண்டியா களமிறங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி 17.5 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் தினேஷ் கார்த்திக்  31 ஓட்டத்துடனும், பாண்டியா 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பல் உஷேன் தோமஸ், கிமோ பவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கரி பியர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35