ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கோரி மட்டு.வில் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

04 Nov, 2018 | 12:27 PM
image

ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

"ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று" என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் மக்களின் ஜனநாயக கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இங்கு கேஷங்கள் எழுப்பப்பட்டதுடன், சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி இன்று செயற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், முகாமையாளர்கள்,மாநகர,பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மைத்திரியே சீனிக்கும் டீசலுக்கும் வாக்களிக்கவில்லை, தீர்வுத்திட்டமே தேவை, மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சி எமக்கு வேண்டாம், 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், பாராளுமன்றத்தினை உடன் கூட்டு சர்வாதிகாரத்தினை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11