ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா..! (காணொளி இணைப்பு)

Published By: MD.Lucias

20 Mar, 2016 | 08:02 PM
image

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. கடந்த ஆட்டத்தில் அசத்திய தென்னாபிரிக்க தொடக்க ஆட்டகாரர் அம்லா இன்று 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் டி கொக் (44), டூ பிளிஸ்சிஸ் (41), டி வில்லியர்ஸ்(69) ஆகியோர் சிறப்பாக ஆடி நல்ல ஓட்ட எண்ணிக்கையை எடுக்க உதவினார்கள். 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களை எடுத்து. டி வில்லியர்ஸ் 29 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்தார். 

210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். ஆப்கான் தொடக்க ஆட்டகாரர் முகமது ஷெசாத் தென்னாபிரிகாவின் வேக பந்து வீச்சை நாலபுறமும் பறக்கவிட்டார். இதனால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்த தென்னாபிரிக்க அணியினருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. முகமது ஷெசாத் 19 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து மோரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு களமிறங்கிய வீரர்களும் தங்கள் பங்குக்கு அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர். தென் னாபிரிக்காவின் பந்து வீச்சை ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்க்கொண்டு ஓட்டம் குவித்த விதம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. 

20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய தென் னாபிரிக்க வீரர் மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35