வவுனியாவில் வரட்சி நிவாரணம் பெறுவதற்கு அரச விடுதிகளில் சிரமதானம்.

Published By: R. Kalaichelvan

03 Nov, 2018 | 10:31 AM
image

வவுனியாவில் இன்று நகர கிராம சேவையாளரினால் வரட்சி நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து கற்குழிப்பகுதியிலுள்ள பெண்களை அழைத்துக்கொண்டு நகரசபை சிறுவர் பூங்காவினை அண்டிய பகுதியிலுள்ள அரச விடுதிகள், திணைக்களங்களில் சிரமதானம் மேற்கொள்வதற்கு பெண்களை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் குறித்து மேலும் அம்மக்கள் தெரிவிக்கும்போது, 

இன்று காலை கற்குழிப்பகுதியில் நகர கிராம அலுவலகர் வரட்சி நிவாரணம் பெற்றுக்கொள்பவர்கள் சிரமதானம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கற்குழிப்பகுதியிலுள்ள குடும்பப் பெண்கள் பலர் சென்றனர்.

இதன்போது அவர்களை அழைத்துக்கொண்டு சுமார் இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள நகரசபை சிறுவர் பூங்காவினை அண்டிய பகுதிகளில் சிரமதானம் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதையடுத்து குறித்த குடும்பப் பெண்கள் இவ்விடயத்தினை பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர், நீங்கள் விரும்பினால் சிரமதானம் செய்யுங்கள் இல்லாவிட்டால் கிராம அலுவலகரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எனவே தமது பகுதியாக கற்குழிப்பகுதியில் சிரமதானம் மேற்கொள்வதை விடுத்து இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள சிறுவர் பூங்கா வீதியிலுள்ள அரச விடுதிகளிலும், அரச திணைக்களங்களிலும் தம்மை சிரமதானம் மேற்கொள்வதற்கு கிராம அலுவலகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தாங்கள் வீட்டிலிருந்த உடைகளுடன் இப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21