ரணில் கோத்தபாய பேசியது என்ன?

Published By: Rajeeban

02 Nov, 2018 | 03:07 PM
image

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சர்வதேச சமூகத்திடமிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

ரணில்விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் மகிந்தராஜபக்சவின் பிரதிநிதியாக கோத்தபாய ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவை  சந்தித்துள்ளார்.

இலங்கையில் காணப்படும் குழப்பகரமான நிலவரம் காரணமாக சர்வதேச சமூகத்திடமிருந்து  எதிர்பாராமல் எழக்கூடிய எதிர்மறையான குழப்பமான  உணர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கும் சிறிசேனவிற்கும்  அவசியமான பெரும்பான்மையுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தையும் பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தையும் பாதுகாப்பதற்கான மக்களின் ஆதரவு தனக்குள்ளது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் அதனை நிரூபிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றது வேறு எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50