பேச்சுக்கு இடமில்லை பேராட்டத்தின் மூலமே முடிவு - ஆறுமுகன்

Published By: R. Kalaichelvan

02 Nov, 2018 | 11:13 AM
image

இனிமேலும் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை பாரிய ஆர்ப்பாட்டத்தின் ஊடாகவே முடிவு காண்போம் என அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திதிடவுள்ள  தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம் 600 ரூபாவிற்கு மேல் வழங்க முடியாது என முதலாளிமார் சம்ளேனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்ததோடு இனிமேலும் பேச்சுவார்த்தை இடம்பெறாது எனவும் மக்களை வீதிக்கு இறக்கி மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு தீர்வினை எட்டமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வடிவேல் சுரேஸ் 22 கம்பனிகளை சார்ந்த உரிமையாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேனத்திற்கும் இடையில் நான்கு  கட்டபேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இருந்த போதிலும் இணக்கப்பாடு இன்றி குறித்த பேச்சுவார்ததை நிறைவடைந்துள்ள நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்குவதில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களுடைய இரத்தத்தை குறைந்த அளவில் தான் அட்டைகள் உறிஞ்சுகின்றன. ஆனால் இந்த கம்பனிக்காரர்கள் அட்டையை விட அதிகமாகவே உறிஞ்சுகிறார்கள். 150 வருடங்களுக்கு முன்பு தேயிலை தோட்டங்களை வெள்ளைகாரர்கள் பாரமரித்த போது முறையாக இயங்கியது. தற்போது கம்பனிக் காரர்கள் பொறுப்பேற்ற 30 வருடகாலப்பகுதியில் தோட்டங்களை காடாக்கி விட்டனர் எனவும் தெரிவித்தார்.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நாங்கள் 600 ரூபா கேட்கவில்லை நாங்கள் கேட்பது ஆயிரம் ரூபா எங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஆயிரம் ருபா வழங்கப்பட வேணடும். ஆகவே எதிர்வரும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பிறகு  மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்ள் முன்னெடுக்கபடவுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24