இந்திய பிரஜைகள் 12 பேருக்கு விளக்கமறியல்

Published By: Robert

20 Mar, 2016 | 01:23 PM
image

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 18ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து பொலிசாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, இவர்களிடம் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட இலேகியம், எண்ணெய், தூள் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதவான் தெரிவித்துள்ளார். 40 வயதிற்கு மேற்பட்ட ஐந்து பெண்களும், ஏழு ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46