"யாழ். வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்"

Published By: Vishnu

01 Nov, 2018 | 05:59 PM
image

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் எடுத்துத்துரைத்தார்.

யாழ்ப்பாணம் - கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான சிறியரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கோப்பாய் பொலிஸாரால் நேற்று   மாலை கைது செய்யப்பட்டார்.

முச்சக்கர வண்டி சாரதியான சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்டதாக சிறிய வாள் ஒன்றை பொலிஸார் மன்றில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பித்தனர்.

சந்தேக நபர் சார்பில் பெண் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் முன்னிலையானார்.

"சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திய 2 ஆண்கள் ஒரு பெண்ணை ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சென்றார். அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் ரயில் நிலையத்துக்கு அண்மையாக நின்ற பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் எடுத்தனர்.

அவர்களில் ஆண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதியான இந்த சந்தேகநபரையும் கைது செய்தனர். அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வாள் ஒன்றை அவரடம் மீட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்" என்று சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் மன்றில் சமர்ப்பணம் செய்து சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்தார்.

"சந்தேகநபரிடமிருந்து கைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் அவர் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபடும் இடங்களின் ஒளிப்படங்கள் இருந்தன.

சந்தேகநபர், மானிப்பாய் பகுதியில் எடுத்த அந்தப் படங்களை, வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அனுப்பி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையில் ஈடுபடும் இடங்கள் தொடர்பில் அவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரால் முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்து இறக்கிய இருவர், விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் அவர்கள் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48