"ஜ‌னாதிப‌தி, பிர‌த‌ம‌ரை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ஒன்றுப‌ட‌ வேண்டும்''

Published By: R. Kalaichelvan

01 Nov, 2018 | 05:18 PM
image

த‌ன் உயிர் போனாலும் ச‌ம‌ஷ்டியும் இல்லை, வ‌ட‌ கிழ‌க்கு இணைப்பும் இல்லை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்த‌மைக்காக‌ ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிறிசேனாவுக்கு உல‌மா க‌ட்சி பாராட்டுத்தெரிவித்துள்ள‌து.இத்த‌கைய‌ ஒரே கொள்கையுள்ள‌ ஜ‌னாதிப‌தி, பிர‌த‌ம‌ரை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ஒன்றுப‌ட‌ வேண்டும் என‌வும் கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையிலான‌ ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சிக்கு முஸ்லிம் ச‌மூக‌ம் பெருவாரியாக‌ வாக்க‌ளித்த‌ போதும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு விரோத‌மாக‌வே அக்க‌ட்சி செய‌ற்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து.

இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வு பேச்சு 2001ல் ஆர‌ம்பித்த‌ போது முஸ்லிம் காங்கிர‌சின் 12 எம் பீக்க‌ள் ஐ தே க‌வுட‌ன் இருந்தும் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ளுக்கு த‌னித்த‌ர‌ப்பு வ‌ழ‌ங்க‌வில்லை.

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீமும் த‌னி மாகாண‌ம், த‌னித்த‌ர‌ப்பு ப‌ற்றி பேசும் த‌ருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ ஐ தே க‌வின் தாள‌த்துக்கேற்ப‌ ஆடினார்.

அத‌ன் பின் புலிக‌ள் அர‌சு ஒப்ப‌ந்த‌த்தில் வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை ஒட்டுமொத்த‌மாக‌ புலிக‌ளுக்கு அடிமைக‌ளாக்கிய‌தால் வாழைச்சேனையில் முஸ்லிம்க‌ள் இருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்டு ந‌டு வீதியில் புலிக‌ளால் எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். 

அதே போல் மூதூர் முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இப்ப‌டியான‌ எக்க‌ச்ச‌க்க‌மான‌ பாதிப்புக்க‌ளை முஸ்லிம் சமூக‌ம் ச‌ந்தித்த‌ நிலையில்தான் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வினால் யுத்த‌ம் முடிவுக்கு கொண்டு வ‌ந்து  முஸ்லிம்க‌ள் சுத‌ந்திர‌ம் அடைந்த‌ன‌ர்.

ஆனாலும் 2012க‌ளில் வெளிநாட்டு ச‌திக‌ள் மூல‌ம் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌, முஸ்லிம் முர‌ண்பாடுக‌ள் கார‌ண‌மாக‌ 2015 ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் முஸ்லிம் பொது ம‌க்க‌ள் ஐ தே க‌வின் ந‌ல்லாட்சி த‌த்துவ‌த்தில் ம‌ய‌ங்கின‌ர். 

ஆனாலும் இத‌ன் பின்னால் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து முஸ்லிம்க‌ளை அடிமையாக்க‌ துடிக்கும் ட‌ய‌ஸ்போரா உள்ள‌தை உல‌மா க‌ட்சி ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்ன‌துட‌ன் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வையும் ஆத‌ரித்த‌து.

அத‌ன் பின் ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியின் கூட்டுக்க‌ட்சி என்ற‌ அடிப்ப‌டையிலும் ஜ‌னாதிப‌திப‌தியை, வ‌ட‌க்கு கிழ‌க்கு இண‌ப்பு, முஸ்லிம்க‌ளை ஓர‌ம்க‌ட்டும் புதிய‌ அர‌சிய‌ல் ய‌ப்பு முய‌ற்சி போன்ற‌வ‌ற்றில் ஈடுப‌டும் ஐ தே க‌விட‌மிருந்து மீட்டெடுக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வும் உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தி மைத்திரியுட‌ன் இணைந்த‌துட‌ன் அவ‌ருட‌னான‌ ச‌ந்திப்புக்க‌ளின் போது மைத்திரியும் ம‌ஹிந்த‌வும் மீண்டும் இணைய‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையையும் முன் வைத்து வ‌ந்த‌து. 

அத்துட‌ன் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு ஆத‌ர‌வாக‌ பேசிய‌ திரு. ச‌ம்ப‌ந்த‌னை க‌ண்டித்து அவ‌ர‌து இல்ல‌த்தின் முன்பாக‌ உல‌மா க‌ட்சி ச‌த்தியாக்கிர‌க‌த்திலும் ஈடுப‌ட்ட‌து.

இவ்வாறு வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு முய‌ற்சிக்கெதிராக‌ ச‌த்தியாக்கிர‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

இத்த‌கைய‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளினால் ஜ‌னாதிப‌தி மைத்திரி ஐ தே க‌வின் உண்மையான‌ உண்மையான‌ முக‌த்தை தெரிந்து கொண்டு ந‌ல்ல‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை எடுத்திருப்ப‌துட‌ன் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு முய‌ற்சி, அவ‌ற்றை இணைத்த‌ ச‌ம‌ஷ்டி என்ப‌வ‌ற்றை ப‌கிர‌ங்க‌மாக‌ எதிட்த்திருப்ப‌து ந‌ல்ல‌ விடய‌மாகும். 

பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வும் இதே கொள்கை கொண்ட‌வ‌ர் என்ப‌தால் இது விட‌ய‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌ம் ஜ‌னாதிப‌திக்கும் பிர‌த‌ம‌ருக்கும் ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வேண்டிக்கொள்கிற‌து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04