கரங்களை உதாசீனம் செய்யாதே” - யாழில் சித்த வைத்தியத்துறை மாணவர்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

01 Nov, 2018 | 03:32 PM
image

உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் கைதடியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக சித்த வைத்திய துறை மாணவர்களின் ஏற்பாட்டில் வைத்தியத்துறை வளாகத்திற்கு முன்பாக A9 வீதியில் இன்று காலை 12 மணிக்கு இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலிருந்து பலரும் ஆதரவைத் தெரிவுத்துள்ளனர்.  இதற்கமைய பலரும் பல்வேறு இடங்களிலும் இதற்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே சித்த வைத்திய மாணவர்களும் தமது ஆதரவைத் தெரிவுத்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இன்றைய தினம் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

உழைப்புற்கேற்ப ஊதியத்தை கொடு, உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப் போராட்டத்தில் சித்த வைத்தியத்துறை மற்றும் பல்கலைக்கழக ஏனைய துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46