சிறுபான்மை கட்சிகளுக்கு நஸிர் அஹமட்டின் வேண்டுகோள் !

Published By: Vishnu

01 Nov, 2018 | 03:14 PM
image

பழையதேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகள் அவதானம் கொண்டுசெயல்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் வலியுறுத்துகியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளில் 3 சபைகள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. 6 மாகாண சபைகள் தேர்தலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. மீளவும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்குப் பொறுப்பாக அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றில் தோல்வியைத் தழுவிய மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை தூசுதட்டி, கலப்பு முறையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் எண்ணங்கள் முன்னெடுக்கப்படக் கூடும். 

எனவே இத்தகைய திரைமறைவு நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல், பழையதேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகள் அவதானம் கொண்டுசெயல்பட வேண்டும்.

தற்போதைய அரசியல் குளறுபடிகளை பார்க்கும் போது ஜனநாயக நடைமுறைகள் குறித்த ஐயம் எற்படுகின்றன. தத்தமது வசதிகளுக்கும் வாய்ப்புகளும் ஏற்றாற் போல் ஜனநாயக நடைமுறைகளை அதிகார பலம் கொண்டுமாற்றி அமைத்துச் செயற்பட முடியும் என்ற தோற்றம் எதிலும் கோடிகாட்டி நிற்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டிருக்கின்ற மாகாண சபை தேர்தல் குறித்து இவ்வேளையில் நாம் கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது. சிறுபான்மை மக்கள் என்ற முறையில் இது எமக்கு முக்கியமானது. 

எமது பிரதிநிதித்துவங்கள் குறித்தும் எமது வாழ்வியல் இருப்புக்குறித்தும் நாம் கவனமின்றி இருந்து விட முடியாது. எமது பிரதிநிதித்துவங்களில் குறைவை எற்படுத்தும் நோக்கில் திரைமறைவில் காய்நகர்தல்கள் மேற் கொள்ளப்படுமானால் அதனை எதிர்த்து நாம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். கிழக்கில் மேற்கொள்ளப்பட்டஎல்லைநிர்ணயம் முஸ்லிம் மக்களுக்குப் பாராதூரமானதாகவே அமைந்திருந்தது. இதை நாம் அங்கீகரிக்க முடியாது.

குழம்பிப் போயிருக்கின்ற நாட்டு நடப்பின் தற்போதைய நகர்வுகளை சிறுபான்மை மக்கள் என்றரீதியில் நாம் மிக அவதானமாக கவனித்து அதற்கான காவல் அரண்களை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08