பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்துமா மே.இ.தீவுகள்

Published By: Vishnu

01 Nov, 2018 | 12:09 PM
image

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகளில், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை ஏற்கனவே மேற்கிந்திய அணி இழந்துள்ள நிலையில் ஒருநாள் தொடரில் 2:1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந் நிலையில் இன்று இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் இந்தியா வசம் ஆகும். அதேநேரம் மேற்கிந்திய அணி போட்டியில் வெற்றியீட்டினால் தொடர் 2:2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடையும். 

எவ்வாறெனினும் இன்றைய போட்டியில் வெற்றியீட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு தொடர்ச்சியாக 8 ஆவது ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

மேற்கிந்திய அணி இறுதியாக 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் இரு நாடுகளக்குமிடையே நடந்த 7 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இன்று களமிறங்கவுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக் குழாமில்  ரோகித் சர்மா, தவான், ராயுடு, டோனி, கேதர் யாதவ், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹமட், பும்ரா, ராகுல், சாஹல், ரிஷாத் பந், உமேஷ் யாதவ் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஜோசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிக் குழாமில் சந்திரபோல் ஹெம்ராஜ், கிரேன் பவுல், ஷெய் ஹோப், சாமுவேல்ஸ், சிம்ரன் ஹேட்மேயர், ரோவ்மன் பவுல், பேபியன் அலன், அஸ்லி நர்ஸ், கிமோ போல், கேமர் ரோச், சுனில் அம்பிரஸ், தேவேந்திர பிஷா, மெக்கோய் மற்றும் உஷ்மன் தோமஷ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09