1000 ரூபா சம்பள உயர்வுக்கு வலுசேர்க்க தெஹியோவிட்டவில் போராட்டம் 

Published By: Vishnu

31 Oct, 2018 | 07:34 PM
image

தோட்ட தொழிலாளர்களின் 1000  சம்பள உயர்வுக்கு வலுசேர்க்கும் முகமாக இன்று கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து தெஹியோவிட்ட நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர். 

இந்தப் பேரணியில் தெஹியோவிட்ட வலயத்தைச் நேர்ந்த 60 ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 300 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

இன்று மாலை 3.00 மணி அளவில் தெஹியோவிட்ட எரிப்பொருள் நிரப்பும் நிலைய அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆதரவு பேரணி கோசங்களை எழுப்பிய வண்ணம் தெஹியோவிட்ட நகரின் ஊடாக தெரணியகலை பாதை சந்தி வரை சென்றது.

 

சுமார் இரண்டு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு - ஹட்டன் பிரதான விதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது. 

இதன்போது ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து உடனடியாக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வாக 1000 ருபாவை வழங்கவேண்டும் என்றும் அரசு இதில் உடனடி கவனத்தை செலுத்தவேண்டும் என்றும். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பகர சூழ்நிலையில் நாட்டின் பிரதமராக யார வருகிறாரோ அவர் முதலில் எமது மக்களின் பிரச்சினைக்கு திர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38