ஆறுமுகன், வடிவேல் 1000 ரூபாவை பெற்றுக் கொடுத்தால் வரவேற்க்கத்தக்கது - மனோ

Published By: Vishnu

31 Oct, 2018 | 04:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முறையற்ற விதத்தில்  உருவாகிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஆறுமுகன் தொண்டமான் மற்றும்  வடிவேல் சுரேஷ் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பார்களாயின் அது வரவேற்கத்தக்கது என  தமிழ் முற்போக்க கூட்டணியின்  தவைரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

ஜனநாயக நாடு அரசியலமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதுவே காலகாலமாக இடம்பெற்று வந்தது. ஆனால் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க பதவி  நீக்கம் மற்றும் புதிய பிரதமர் தெரிவு என்பன முற்று முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது. இச்செயற்பாடு சர்வதேசத்தில் என்மை இழிவுப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததை தொடர்ந்து இடைப்பட்ட காலத்தில்  பல விடயங்கள் அரசியல் நாகரிகத்திற்கு புறம்பாக இடம் பெற்றுள்ளது பலர்   பணத்திற்கும்,  கட்சி தாவல்கள்களுக்கும் விலைபோயுள்ளனர். முதல் நாள் தன்  இனப் பெருமை மற்றும்  மொழியின் பெருமை தொடர்பில் கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வந்து பறைசாற்றியவர்கள் அடுத்த நாள்   புதிய அரசாங்கத்தில் சென்று  அமைச்சு  பதவிகளை பெற்றுக் கொண்டமையானது  வேடிக்கையாகவுள்ளது.

இவ்வாறான விடயங்களே எனக்கு அரசியல் தொடர்பில் விரக்தியினை ஏற்படுத்தியது. அதனாலே எனது உளகுமுறல்களை தனிப்பட்ட முகப்பு புத்தகத்தில் அரசியலில் விடைப்பெறும் தருணம்  என்று பதிவிட்டிருந்தேன்.  

தற்போது ஐக்கிய தேசிய கட்சி பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருபோதும் கட்சி துரோகம் செய்யமாட்டேன்  அவ்வாறு செய்தால் தமிழ்   இனத்தினை அவமதிப்பதாகும்  தொடர்ந்து  தமிழ்  முற்போக்கு  கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு  வழங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40