செல்பியால் உயிரைப் பறிகொடுத்த இளம் தம்பதியினர்

Published By: Digital Desk 4

31 Oct, 2018 | 03:51 PM
image

செல்பி மோகத்தால் இளம் தம்பதியினர் உயிரிழந்த சம்பவமொன்று கலிபோரினியாவில் இடம்பெற்றுள்ளது,

கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதியினரே கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வாழும் குறித்த இந்திய தம்பதிகளான 29 வயதான விஷ்ணு விஷ்வநாத், 30 வயதான மீனாட்சி மூர்த்தி பலதரப்பட்ட சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில், யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் உச்சியில் ஆபத்தான நிலையில், செல்பி எடுக்க முயன்றபோதே குறித்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்போது எதிர்ப்பாராத விதமாக 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47