மன்னார் சதொச மனித புதைகுழி ;  216 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Published By: Daya

31 Oct, 2018 | 02:29 PM
image

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 98ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மனித புதைகுழி எலும்புக்கூடுகளை புளோரிடா அனுப்புவதற்கு சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். 

தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.

 மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.

 குறிப்பாக இன்றைய  தினத்துடன்  98 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார் .

அத்துடன் குறித்த மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை மன்னார் நீதவான்  வழங்கியுள்ளதாகவும் விரைவில் அதி முக்கியமான எச்சங்கள் மற்றும் தடய பொருட்களை குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21