19 ஆவது திருத்தம் : ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புகளுக்கிடையில் பாரிய வேறுப்பாடு: பீறிஸ்

Published By: Digital Desk 7

31 Oct, 2018 | 01:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

"19 ஆவது திருத்தம் தொடர்பில் ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புகளுக்கிடையில் பாரிய  வேறுப்பாடுகள் காணப்படுகின்றது." என குறிப்பிட்டு  பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தற்துணிவின் பெயரில் பிரதமர் ஒருவரை  பதவியில் இருந்து நீக்க முடியாது  என்ற கருத்துக்கள் எதிர் தரப்பினரால் குறிப்பிடப்படுகின்றது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். 

19ஆவது அரசியலமைப்பின் 48(01)   சரத்தில் குறிப்பிட்டதற்கமைய பதவியில் இருந்து விலகுவது,  அல்லது அவரே சுயமாக விலகுவது மற்றும் வேறு வழிமுறைகளில் பதவி விலகினாலும் அவர் தொடர்ந்து  பதவி வகிக்க தகுதியற்றவர் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஒருவரின் பதவி  காலம்  மரணத்தினாலோ, அல்லது அவரே பதவி விலகுவதாலோ, வேறு காரணங்களினாலோ வெற்றிடமாகும் என்று ஆங்கில மொழிபெயர்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரதமர் ஒருவரது பதவி நீக்கம் தொடர்பில் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் தெளிவான விடயங்கள்  உள்ளடக்கப்பட்வில்லை ஆனால் சிங்கள மொழிப்பெயர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது  

பிரதமர் ஒருவரது  பதவி  கால நீடிப்பு மற்றும்  பதவி நீக்கம் தொடர்பிலான பிறிதொரு முறைமைகள் தொடர்பிலும்  19ஆவது திருத்தத்தில்  சிங்கள மொழிப்பெயர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தத்தில் ஆங்கில மொழிப் பெயர்ப்பில்  பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. இதனையே சிலர்  பயன்படுத்திக் கொள்கின்றனர். என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47