ஊடகங்கள் மீதான மஹிந்த ஆதரவாளர்களின் தாக்குதல்  இருண்டயுகத்தை மீண்டும் நினைவுபடுத்துகின்றன

Published By: Daya

31 Oct, 2018 | 12:51 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதியினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 26ஆம் திகதியன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் அரச ஊடக நிறுவனங்கள் மீது முன்னெடுத்திருந்த செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்பதுடன்,

அதிகாரத்திலிருப்பவர்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதோடு, ஆசிரிய பீடத்தின் சுயாதீனத்துவத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் எனும் சுதந்திர ஊடக செயற்பாடுகள் தொடர்பில் இயங்கும் பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலையில் அரச ஊடக நிறுவனங்கள் மீது இடம்பெற்றிருந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கண்டனம் தெரிவித்து எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,

அரச ஊடக நிறுவனங்களின் மீது மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அணியினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும் எனக் கவலை வெளியிட்டுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் தலைவர் டேனியல் பஸ்டர்ட், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதுடன், ஊடக நிறுவனங்களின் ஆசிரியபீட சுயாதீனத்துவத்தை பாதுகாப்பது அனைத்து அரசியல் கட்சிகளினதும் கடமையாகும்.

அதனூடாகவே பக்கச்சார்பற்ற உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடைவதனை உறுதிப்படுத்த முடியும். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது ஊடகத்துறை தொடர்பில் காணப்பட்ட இருண்ட பக்கங்களை தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு சார்ந்த குழப்பநிலை மீண்டும் நினைவுபடுத்துகின்றது .

2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக வாக்களித்திருந்த போதும், இதுவரையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எவ்வித வன்முறைச் சம்பவங்களுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51