அரசியல் தலைவர்களுக்கு கத்தோலிக்க ஆயர் பேரவையின் வேண்டுகோள் !

Published By: Priyatharshan

31 Oct, 2018 | 12:13 PM
image

அனைத்து அரசியல் தலைவர்களும் குறுகிய மனப்பான்மையுடன் பலனற்ற விதத்தில் சிந்திக்காது, நாட்டின் நலன்கருதி தற்போது உருவெடுத்துள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் யாப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டுமென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இலங்கையில் நிலவுகின்ற சூழ்நிலை குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஜே.வின்ஷ்டன் எஸ். பர்னாந்து மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதம செயலாளர் ஆயர் டி.வலன்ஸ் மென்டிஸ் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எம் நாட்டின் நிகழ்கால சூழ்நிலை குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அவதானம் ஈர்க்கப்பட்டுள்ளது. 

இச் சீர்குலைக்கப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற விளைவுகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பது நாட்டு மக்களே என்பதை அனைவரும் நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, எம் நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களிடமிருந்தும் நாம் வேண்டிக்கொள்வது, குறுகிய மனப்பான்மையுடன் பலனற்ற விதத்தில் சிந்திக்காது, நாட்டின் எதிர்கால நலன்கருதி இப்போது உருவெடுத்துள்ள கிளர்ச்சிகரமான நிலைக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு யாப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டுமென்பதாகும்.

எம் நாட்டில் இறந்தகால வரலாற்றை பின்நோக்கும் போது, நாம் முகங்கொடுத்த விடயங்கள் இரத்தம் சிந்தப்பட்ட நிலைகளே எம் கண்முன் நிற்கின்றது. 

இதன் நிமித்தம் அனைவரிடம் இருந்தும் நாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது எம் நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக மதிநுட்பத்துடனும் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில் எடுக்கும் எவ்வித தீர்மானமாக இருப்பினும், அது நீதிக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஏற்ப அவற்றை கடைப்பிடித்தல் அவசியம். 

இதன் முக்கிய விடயமாவது, பதவியில் நிலைத்திருப்பது இல்லையேல் பதவியிலிருந்து நீங்குவது அல்ல, மக்களுக்கு சக்தியையும் எம் நாட்டு பூமித்தாய்க்கு இயற்கையிலேயே கிடைக்கப்பெற்ற கொடைகளுக்கும் இடையூறு விளைவிக்காது, நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பதாகும். 

எனவே அனைவரும் ஞானத்துடனும் நல்லறிவுடனும் செயற்படுவதற்கான இறையாசீர் வேண்டுமெனவும் எம் நாட்டினை ஆசீர்வதிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11