(க.கிஷாந்தன்)

டயகம பொலிஸ் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் நேற்று இரவு நடைபெற்ற காமன் கூத்து நிகழ்வின் போது தூதன் அவதாரத்தில் நடித்தவர் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தூதன் அவதாரத்தில் நடித்தவர் வைத்திருந்த தீபந்தங்களுக்கு பெற்றோல் கலந்த மண்ணெண்னையை ஊற்றியதால் தீ பரவி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளார்.