மஹிந்தவின் நியமனம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்தது என்ன?

Published By: Vishnu

30 Oct, 2018 | 01:45 PM
image

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதமர் ஒருவரை தெரிவுசெய்யும் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை இதன்போது ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கி கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த வெளிநாட்டு தூதுவர்கள், நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப நாட்டினுள் அமைதியை பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மை்த்திரிபால சிறிசேன,

நாட்டின் அரசியல் அமைப்பிற்கேற்ப தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே, தான் பிரதமரை நியமித்துள்ளதாகவும், புதிய அரசாங்கம் என்றவகையில் அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலான மத்தியிலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பலமாக முன்கொண்டு செல்வதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்ஹ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31