"கண்ணாடி"  

Published By: Daya

30 Oct, 2018 | 11:26 AM
image

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் "கண்ணாடி"  திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

சமீபத்தில் வெளியான 'மதுர வீரன்' திரைப்படத்தை 'V ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் "ஆடை" எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து "V ஸ்டுடியோஸ்" நிறுவனம் "ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் "உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'கண்ணாடி' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். 

இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய "யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்" நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த 'கைதி பேண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர். 

அதனை தொடர்ந்து "யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்" நிறுவனம் 'கண்ணாடி' திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து "V ஸ்டுடியோஸ்" உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். ஹோரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன் பல படங்களின் VFX காட்சிகளை அமைத்த தன் சொந்த அனுபவங்களை கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம். 

மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்.

வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37