மின்­சாரம் தாக்கி 94 பேர் உயி­ரி­ழப்பு

Published By: Robert

19 Mar, 2016 | 09:25 AM
image

மின்­சா­ரத்தின் தாக்கம் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இலங்கை பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் கூட்­டுத்­தா­பன தொடர்­பாடல் பிரி வின் பிரதிப் பணிப்­பாளர் வி.விம­லா­தித்தன் தெரி­வித்தார்.

இலங்கை பொதுப்­ப­யன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் ஏற்­பாட்டில் மின்­சார நுகர்­வோரின் உரி­மை­களும் கட­மை­களும் தொடர்பில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­களை தெளி­வு­ப­டுத்தும் கருத்­த­ரங்கு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பொதுப்­ப­யன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் இணை­யப்­பி­ரிவு பிர­திப்­ப­ணிப்­பாளர் தனுஸ்க உட்­பட ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள், ஊட­க­வி­ய­லாளர்கள் எனப் பலர் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது மின்­சாரம் பெறும் மக்­களின் அடிப்­படை உரி­மைகள், அவர்கள் ஆற்­ற­வேண்­டிய கட­மைகள், அவர்கள் பாதிக்­கப்­ப­டும்­போது முறைப்­பா­டுகள் மேற்­கொள்ளும் வழி­வ­கைகள் தொடர்பில் இங்கு ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக மின்­சார விநி­யோ­கங்­களை பெறுவோர் அதன் தாக்­கத்தில் இருந்து பாது­காக்கும் வழி­மு­றைகள் தொடர்பில் அறிந்­தி­ருக்­க­வேண்­டிய தேவைப்­பா­டுகள் தொடர்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இங்கு கருத்து தெரிவித்த பொதுப்­ப­யன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் கூட்­டுத்­தா­பன தொடர்­பாடல் பிரிவின் பிர­திப்­ப­ணிப்­பாளர் வி.விம­லா­தித்தன்,

மின்­சாரம் தொடர்பில் பொது­மக்கள் மிக வும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். குறிப்­பாக வீடு­களில் உள்ள குழந்­தைகள் மற்றும் பாட­சாலை மாண­வர்கள் தொடர்பில் அக்­க­றையுடன் செயற்­ப­ட­வேண்டும்.

பாவ­னை­யா­ளர்கள் மின் பாவ­னை­யை பாது­காப்­பான முறையில் இட­று­ஆ­ழி­யி­னை ப்­பொ­ருத்தி மேற்­கொள்­ள­வேண்டும்.பாது­காப்­பற்­ற­மு­றையில் மின்­சா­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதன் கார­ண­மாக மின்­தாக்­கத்­தினால் உயி­ரி­ழப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன.

2014ஆம் ஆண்டு இலங்­கையில் 180பேர் மின்­சார தாக்­கத்­தினால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.எனினும் பொதுப்­ப­யன்­பாட்டு ஆணைக்­குழு மேற்­கொண்­டு­வரும் விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­குகள் மூலம் இது­கு­றை­வ­டைந்­துள்­ளது. 2015ஆம் ஆண்டு 94 பேர் மின்­சா­ரத்­தாக்­க­தினால் உயிரிழந்துள்ளனர்.

மின்சார தாக்கத்தினால் ஏற்படும் உயிரி ழப்பினை குறைப்பதற்கான நடவடிக்கை களை பொதுப்பயன் பாட்டு ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. 2020ஆம் ஆண்டு இந்த இழப்பினை நிறுத்தும் வகை யில் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48