த.தே.கூ. நடுநிலையான முடிவை எடுக்க வேண்டும் - சுரேஷ்

Published By: Vishnu

29 Oct, 2018 | 04:53 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்கான ஆதரவினை தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆதரவு இல்லாது விட்டால் நடுநிலைமை வகிக்கின்ற முடிவினை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி எப்போதும் யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. தனது ஜனாதிபதி பதவியை தக்கவைப்பதற்காக இன்னுமொரு தடவை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நிலைமையை தோற்றுவித்துள்ளார். 

இத்தகைய நிலைமை தமிழ் மக்களுக்கு எத்தகைய சாதகத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

மைத்திரிபால ஆட்சிக்கு வந்த போது பல விடயங்களை கூறினார். குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். தமிழ்மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சிமுறைமை உருவாக்கப்படும் ஊழல்வாதிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என பல விடயங்களை கூறினார். இதில் எவையுமே நிறைவேற்றப்படவில்லை. 

ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இறுதி நிமிடத்திலாவது நெஞ்சை நிமித்தி தங்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெரிவிப்பதன் ஊடாகத்தான் குறைந்தபட்சம் சர்வதேச சமூகத்திற்கோ எமது மக்களுக்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளுக்கோ தெரியப்படுத்த முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திர கட்சிக்கோ இவர்கள் யாருக்குமே தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதை தெளிவுபடுத்துகின்ற காலகட்டமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33