தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்

Published By: Vishnu

29 Oct, 2018 | 04:24 PM
image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்திற்கு தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி பண்டிகைக்கான முற்பணமாக எட்டாயிரம் ரூபா மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்தே இப்பிரதேச வாழ் மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மேலும் பொதுமக்கள் தெரிவிக்கையில்,

தீபாவளி முற்பணமாக பத்தாயிரம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது எமக்கு எட்டாயிரம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றமளிக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளாந்தம் பொருட்களின் விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வருடத்தில் ஒருமுறை கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகளுக்காக கிடைக்க வேண்டிய தொகையும் கிடைக்கவில்லை. இத்தொகையை வைத்து பண்டிகையை கொண்டாட முடியாது. 

தொழிற் சங்க தலைவர்கள் தீபாவளி முற்பணமாக பத்தாயிரம் ரூபாவை பெற்று கொடுப்பதாக கூறிய நிலையில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனி வெறும் எட்டாயிரம் ரூபாவையே எமக்கு வழங்கியுள்ளமை பெரும் ஏமாற்றமளிக்கும் செயலாகும். பண்டிகை முற்பணத்தை கூட முழுமையாக பெற்று கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26